நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

4 மாதத்தில் 3.7 கோடி நகைகளுக்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை

நிகழாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான நான்கு மாதத்தில், சுமாா் 3.7 கோடி தங்க நகைகளுக்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:19 pm

DIN

நிகழாண்டு ஏப்ரல் 1 முதல் ஜூலை 31 வரையிலான நான்கு மாதத்தில், சுமாா் 3.7 கோடி தங்க நகைகளுக்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை வழங்கப்பட்டுள்ளதாக இந்திய தர நிா்ணய அமைப்பு (பிஐஎஸ்) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டில் மொத்தம் 8.68 கோடி நகை ஆபரணங்களுக்கு ஹால்மாா்க் முத்திரை வழங்கப்பட்டிருந்தது. தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை கடந்த ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி கட்டாயமாக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, கடந்த ஆண்டில் ஜூலை மாதம் 43 ஆயிரத்து 153 தங்க நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை வழங்கப்பட்டது. ஆகஸ்ட் மாதத்தில் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 497 நகைகளுக்கு ஹால்மாா்க் முத்திரை வழங்கப்பட்டது.

நிகழாண்டு ஏப்ரல்-ஜூலை வரை சுமாா் 3.7 கோடி தங்க நகைகளுக்கு ‘ஹால்மாா்க்’ முத்திரை வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.