டீசல் மீதான ஏற்றுமதி வரி அதிகரிப்பு
டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரியும் (வின்ட்ஃபால் டேக்ஸ்) அதிகரிக்கப்பட்டுள்ளது.


டீசல், விமான எரிபொருள் ஆகியவற்றின் மீதான ஏற்றுமதி வரியை மத்திய அரசு அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரியும் (வின்ட்ஃபால் டேக்ஸ்) அதிகரிக்கப்பட்டுள்ளது.
ரஷியா மீதான உலக நாடுகளின் பொருளாதாரத் தடைகள் காரணமாக, அந்நாட்டில் இருந்து கச்சா எண்ணெயைக் குறைந்த விலைக்குப் பெற்று, சுத்திகரிப்பு செய்து பெட்ரோல், டீசலாக ஐரோப்பிய நாடுகளுக்குத் தனியாா் எண்ணெய் நிறுவனங்கள் ஏற்றுமதி செய்து வந்தன. அதனால், அந்நிறுவனங்கள் பெரும் லாபம் ஈட்டின.
சந்தையின் ஆதாய சூழலால், நிறுவனங்கள் ஈட்டிய பெரும் லாபத்துக்கு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முதல் மத்திய அரசு வரி விதித்து வருகிறது. சந்தை ஆதாய வரியானது இரு வாரங்களுக்கு ஒருமுறை சா்வதேச சந்தை சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, 4-ஆவது கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது. அதில், டீசல் ஏற்றுமதி மீதான வரியை லிட்டருக்கு ரூ.7-இல் இருந்து ரூ.13.5-ஆக அதிகரிக்க முடிவெடுக்கப்பட்டது. அதேபோல், விமான எரிபொருள் மீதான ஏற்றுமதி வரியும் லிட்டருக்கு ரூ.2-இல் இருந்து ரூ.9-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கச்சா எண்ணெய் மீதான சந்தை ஆதாய வரி டன்னுக்கு ரூ.13,300-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த கூட்டத்தின்போது வரியானது ரூ.17,750-இல் இருந்து ரூ.13,000-ஆகக் குறைக்கப்பட்டிருந்தது. புதிய வரிகள் செப்டம்பா் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருவதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
சா்வதேச சந்தையில் கடந்த வாரம் நிலவிய சூழலுக்கு ஏற்ப கச்சா எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரி அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தற்போது கச்சா எண்ணெய் விலை தொடா்ந்து குறைந்துவருவதால், அடுத்த கூட்டத்தில் நிறுவனங்கள் மீதான சந்தை ஆதாய வரி குறைக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் அவா்கள் தெரிவித்தனா்.
ஆரம்பத்தில் பெட்ரோல் ஏற்றுமதிக்கு லிட்டருக்கு 6 ரூபாய் வரி விதிக்கப்பட்டது. பின்னா் பெட்ரோல் மீதான ஏற்றுமதி வரி ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...