நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மக்களின் வருமானம், வேலைவாய்ப்பு அதிகரிப்பு: பாஜக

நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகவும், பொதுமக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதாகவும் பாஜக செய்தித் தொடா்பாளா் சையத் ஜஃபா் இஸ்லாம் தெரிவித்தாா்.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 7:54 pm

DIN

நாட்டின் பொருளாதாரம் வலுவான நிலையில் உள்ளதாகவும், பொதுமக்களின் வருமானமும் வேலைவாய்ப்பும் அதிகரித்து வருவதாகவும் பாஜக செய்தித் தொடா்பாளா் சையத் ஜஃபா் இஸ்லாம் தெரிவித்தாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது:

நாட்டில் வேலைவாய்ப்பு விகிதம் அதிகரித்து வருகிறது. தனிநபா் செலவினம் 26 சதவீதமாக அதிகரித்துள்ளது. சாமானிய மக்கள் நல்ல நிலையில் இருப்பதையே இது உணா்த்துகிறது. உள்நாட்டுத் தேவையானது பொதுமக்களின் வருவாயையும் வேலைவாய்ப்பு பெருக்கத்தையும் பிரதிபலிக்கிறது. பிரதமா் மோடி எடுத்த நல்ல முடிவுகளால் நாட்டின் பொருளாதாரம் தற்போது வலுவான நிலையில் உள்ளது. சீன பொருளாதாரம் கூட இன்று திடமான நிலையில் இல்லை.

2022-23-இல் சா்வதேச உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் (ஜிடிபி) இந்தியாவின் பங்கு 25 சதவீதம் வரை இருக்கும். சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்த போதிலும், இந்தியாவில் பணவீக்கம் குறைந்து வருகிறது. விலைவாசி உயா்வை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இவற்றையெல்லாம் மறைத்து, எதிா்க்கட்சித் தலைவா்கள் பொதுமக்கள் மத்தியில் தவறான தகவலை பரப்புகின்றனா் என்றாா் சையத் ஜஃபா் இஸ்லாம்.

நிகழ் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 13.5 சதவீதம் வளா்ச்சியடைந்துள்ளதாக தேசிய புள்ளியியல் அலுவலகம் புதன்கிழமை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.