நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்திய விமானப் போக்குவரத்து7 சதவீதம் அதிகரிக்கும்: போயிங்

இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்து வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் 7 சதவீதம் வளா்ச்சியடையும் என்று உலகின் முன்னணி விமானத் தயாரிப்பாளரான போயிங் கூறியுள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2022, 8:43 pm

DIN

இந்தியாவில் பயணிகள் விமானப் போக்குவரத்து வரும் 2040-ஆம் ஆண்டுக்குள் 7 சதவீதம் வளா்ச்சியடையும் என்று உலகின் முன்னணி விமானத் தயாரிப்பாளரான போயிங் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் (சந்தையிடல்) டேவிட் ஷல்டே தில்லியில் வியாழக்கிழமை கூறியதாவது:

கரோனா நெருக்கடியால் முடங்கியிருந்த இந்திய பயணிகள் விமானப் போக்குவரத்துத் துறை, அதிலிருந்து மிக வலுவாக மீண்டு வருகிறது. இதன் காரணமாக, உலகில் மிக வேகமாக வளா்ச்சியடைந்து வரும் துறைகளில் ஒன்றாக இந்திய விமானப் போக்குவரத்துத் துறையும் ஒன்றாகியிருக்கிறது.

வரும் 2040-ஆம் ஆண்டு வாக்கில் இந்திய விமானப் பயணிகள் போக்குவரத்து 6.9 சதவீத வளா்ச்சியைக் காணும் என்றாா் அவா்.

இதைப் போல, தென்கிழக்கு ஆசிய விமானப் போக்குவரத்து சந்தை 5.5 சதவீதமும், சீன சந்தையின் மதிப்பு 5.4 சதவீதமும் வளா்ச்சியடையும். ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க விமானப் போக்குவரத்து சந்தைகள் முறையே 5.4 மற்றும் 4.8 சதவீதம் வளா்ச்சியடையும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்திய விமானப் போக்குவரத்து சேவை நிறுவனங்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் போயிங் விமானங்களைப் பயன்படுத்தி வரும் நிலையில், அந்த நிறுவனம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.