மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மத்தியப் பிரதேசம்: குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட இளம் பெண்

தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :1 செப்டம்பர் 2022, 1:00 pm

தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் இளம் பெண் ஒருவர் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காவல் துறை தரப்பில் கூறியதாவது: “இறந்த அந்த பெண் பார்வதி பாய் (24 வயது). அவர் மத்தியப் பிரதேசத்தின் ரய்சன் மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவருக்கு 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 8 மாதக் குழந்தை ஒன்றும் உள்ளது. நேற்று (ஆகஸ்ட் 31) மாலை அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். சம்பவம் நடந்த அன்று இரவு பார்வதியின் கணவர் ராம்கிருஷ்ணா லோதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து, காவல் துறை அந்த மூன்று பேரின் உடல்களையும் கிணற்றிலிருந்து மீட்டனர். இறந்த பெண் மற்றும் அவரது கணவர் ராம்கிருஷ்ணா என இருவரும் கணவர் ராம்கிருஷ்ணாவின் பெற்றோர்  மற்றும் அவர்களது உறவினர்களிடத்தில் இருந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வருகின்றனர். காவல் துறை இந்த தற்கொலை குறித்து அனைத்துக் கோணங்களிலும் விசாரித்து வருகிறது.” என்றனர்.

பார்வதியின் கணவர் ராம்கிருஷ்ணா, எனக்கும் என்னுடைய மனைவிக்கும் இடையே எந்த ஒரு பிரச்னையும் கிடையாது. அப்படி இருக்கையில் இப்படி ஒரு துயரமான முடிவை அவர் ஏன் எடுத்தார் என எனக்குப் புரியவில்லை எனக் காவல் துறையிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.