ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 
ஜார்க்கண்டில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை
Updated on
1 min read

ஜார்க்கண்ட் மாநிலம் செராய்கேலா-கர்சவான் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். 

சிஆர்பிஎப்-யின் கோப்ரா, ஜார்க்கண்ட் ஜாகுவார் மற்றும் மாநில காவல்துறையின் கூட்டு நடவடிக்கையின்போது மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தனர். 

குச்சாய் காவல் நிலையப் பகுதியில் உள்ள பருடா காட்டில் நடந்த நடவடிக்கையில் 2 சிபிஐ(மாவோயிஸ்ட்)  சுட்டுக் கொல்லப்பட்டனர் என்று கோல்ஹான் பிரிவின் துணை ஆணையர் அஜய் லிண்டா தெரிவித்தார். 

பாதுகாப்புப் படையினர் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் சடலங்களை மீட்டுள்ளதாக அவர் கூறினார். தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்புப் படையினருக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே துப்பாக்கிச் சூடு நடந்து வருகின்றது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com