துபை ஓபன் செஸ் போட்டியில் 6-வது சுற்றின் முடிவில் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி 5.5 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த பிரக்ஞானந்தா 6-வது சுற்றில் வெற்றி பெற்றார்.
22-வது துபை ஓபன் செஸ் போட்டி மூன்று வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் நடைபெற்று வருகிறது.
இந்த வருடப் போட்டியில் 171 வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள். பிரக்ஞானந்தா, அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட 78 இந்திய வீரர்கள் இப்போட்டியில் விளையாடுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற கிரிப்டோ கோப்பைப் போட்டியில் பிரக்ஞானந்தா 2-வது இடம் பெற்றார். துபை ஓபன் செஸ் போட்டி செப்டம்பர் 5 அன்று நிறைவுபெறுகிறது.
துபை ஓபன் செஸ் போட்டியில் முதல் 4 சுற்றுகள் வரை முன்னணியில் இருந்த பிரக்ஞானந்தா, 5-வது சுற்றில் தோற்றதால் பின்தங்கினார். இந்நிலையில் 6-வது சுற்றில் சக இந்திய வீரர் ஷர்துல் காகரேவை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா. இதனால் தற்போது 5 புள்ளிகளைக் கொண்டு புள்ளிகள் பட்டியலில் 4 வீரர்களுடன் இணைந்து 2-ம் இடத்தில் உள்ளார். சமீபகாலமாகச் சிறப்பாக விளையாடி வரும் இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி, இப்போட்டியில் முதலிடத்தில் இருந்த ரினட்டை 6-வது சுற்றில் வீழ்த்தினார். இதனால் தற்போது 5.5 புள்ளிகளுடன் ரஷியாவைச் சேர்ந்த அலெக்ஸாண்டருடன் இணைந்து முதலிடத்தில் உள்ளார் அர்ஜுன் எரிகைசி.
துபை ஓபன் செஸ்: பிரக்ஞானந்தா விளையாடிய ஆட்டம்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இ. மெயில்களை எழுதுவதில் செயற்கை நுண்ணறிவு

குஜராத்தில் மரம் நடுவதில் சாதனை... அன்னையின் பெயரில் ஒரு மரம் நடுங்கள் - பிரதமர் மோடி வேண்டுகோள்
தொழில்நுட்பக் கோளாறு: ராஞ்சியில் இருந்து புவனேஸ்வர் புறப்படவிருந்த விமானம் ரத்து!

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணியை அறிவிக்கும் முன்பே சிக்கலில் இந்தியா!
விடியோக்கள்

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke

தர்மேந்திர பிரதான் பதவி விலகினால் எல்லாம் சரியாகிவிடுமா?: அமைச்சர் நிர்மல் குமார் | TVK | BJP



