பாலியல் புகாரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணரு ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
பள்ளிச் சிறுமிகள் இருவா் அளித்த பாலியல் புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட கா்நாடக மாநில முருக மடத்தின் மடாதிபதி சிவமூா்த்தி முருகா சரணருவை திங்கள்கிழமை (செப். 5) வரை போலீஸ் காவலில் சிறையில் அடைக்க உள்ளூா் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இதனிடையே, ‘மடாதிபதியிடம் சட்டத்தின்படி விசாரணையை மேற்கொள்ள போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது’ என்று மாநில முதல்வா் பசவராஜ் பொம்மை கூறியுள்ளார்.
அதன்படி, சித்ரதுர்காவில் உள்ள மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து மடாதிபதியிடம் இன்று விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜாமீன் கோரி கர்நாடக நீதிமன்றத்தில் மடாதிபதி தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியான மடத்தின் செயலாளர் பரமசிவய்யா மற்றும் இளைய மடாதிபதியின் முன்ஜாமீன் மனுக்கள் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க | கா்நாடக மடாதிபதிக்கு செப். 5 வரை போலீஸ் காவல்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தேர்தல் விதிமுறை அமல்: வேலூரில் தலைவர்களின் படங்கள் அகற்றம்!
பூவன்பழம் புட்டு
கேழ்வரகு லட்டு

”சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து பேச EPS-க்கு தைரியம் இல்லை!” அமைச்சர் ரகுபதி
வீடியோக்கள்

போரால் ஏற்பட்ட பாதிப்புகள் அண்ணாமலைக்குத் தெரியவில்லை: திருமா! | VCK | BJP
தினமணி வீடியோ செய்தி...

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

