நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டில் புதிதாக 5,379 பேருக்கு கரோனா பாதிப்பு

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,379 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 செப்டம்பர் 2022, 5:21 am

DIN

நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 5,379 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட செய்தியில்,

கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 5,379 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும், 16 பேர் சிகிச்சைப் பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.

கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 7,094 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். மொத்தம் இதுவரை 4,38,93,590 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தற்போது கரோனாவால் பாதிக்கப்பட்டு 50,594 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 18.81 லட்சம் தடுப்பூசிகள் போடப்பட்ட நிலையில், மொத்தம் 2.13 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.