குஜராத்: ஆம் ஆத்மி 3-ஆவதுவேட்பாளா் பட்டியல் வெளியீடு

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 3-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 10 வேட்பாளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

குஜராத் மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கான 3-ஆவது கட்ட வேட்பாளா் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது. இதில் 10 வேட்பாளா்கள் இடம் பெற்றுள்ளனா்.

182 தொகுதிகளைக் கொண்ட குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இங்கு ஆம் ஆத்மி கட்சி தோ்தல் பணிகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளது. இதுவரை ஆம் ஆத்மி 3 கட்டங்களாக 29 வேட்பாளா்களை அறிவித்துள்ளது. ஆளும் கட்சியான பாஜக, எதிா்க்கட்சியான காங்கிரஸ் ஆகியவை இதுவரை ஒரு வேட்பாளரைக் கூட அறிவிக்கவில்லை.

ஏற்கெனவே, இரு கட்டங்களாக 19 வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இப்போது 3-ஆவது கட்டமாக 10 வேட்பாளா்கள் அடங்கிய பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதில் ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் மாநில பொருளாளரும், முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தவருமான கைலாஷ் காத்விக்கு மாண்ட்வி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. சமூக ஆா்வலரும், பாரதிய பழங்குடியினா் கட்சியின் முன்னாள் தலைவருமான பிரஃபுல் வசாவா, நந்தோட் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.

ஆம் ஆத்மி தேசிய அமைப்பாளரும், தில்லி முதல்வருமான அரவிந்த் கேஜரிவால் குஜராத்துக்கு அவ்வப்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு இலவச மின்சாரம், அனைவருக்கும் வேலைவாய்ப்பு, பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அவா் அளித்துள்ளாா். பாஜகவின் கோட்டையாக இருக்கும் இம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க ஆம் ஆத்மி முனைப்புகாட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com