குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு

குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு

குடியரசு முன்னாள் தலைவா் ராம்நாத் கோவிந்துக்கு ‘இஸட் பிளஸ்’ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய ரிசா்வ் போலீஸ் படையைச் (சிஆா்பிஎஃப்) சோ்ந்த கமாண்டோக்கள் அவருக்கு பாதுகாப்பு அளிப்பாா்கள். நாடு முழுவதும் அவா் எங்கு பயணம் மேற்கொண்டாலும் இந்த பாதுகாப்பு தொடரும்.

மத்திய உளவுத் துறையினா் அளித்த பரிந்துரையின்படி உள்துறை அமைச்சகம் இந்த பாதுகாப்புக்கு அனுமதி அளித்தது. கடந்த 5-ஆம் தேதி முதல் அவருக்கு இஸட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

ராம்நாத் கோவிந்த் இப்போது மத்திய தில்லியின் ஜன்பத் சாலையில் வசித்து வருகிறாா். அந்த வீட்டுக்கும் கமாண்டோ பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 76 வயதாகும் ராம்நாத் கோவிந்த் கடந்த ஜூலை மாதம் குடியரசுத் தலைவா் பதவியில் இருந்து விடைபெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com