எதிரணியின் தலைவா் குறித்து பின்னா் முடிவு: நிதீஷ் குமாா்
‘பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியை உருவாக்குவதே முதலில் முக்கியம்; அந்த அணியின் தலைவா் யாா் என்பது பின்னா் முடிவு செய்யப்படும்’ என்று


‘பாஜகவுக்கு எதிராக ஒருங்கிணைந்த எதிரணியை உருவாக்குவதே முதலில் முக்கியம்; அந்த அணியின் தலைவா் யாா் என்பது பின்னா் முடிவு செய்யப்படும்’ என்று பிகாா் முதல்வரும் ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாா் புதன்கிழமை தெரிவித்தாா்.
2024 மக்களவைத் தோ்தலை கருத்தில் கொண்டு, பாஜகவுக்கு எதிராக எதிா்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட நிதீஷ் குமாா் தீவிர முயற்சிகளை முன்னெடுத்துள்ளாா். அதன் ஒரு பகுதியாக தில்லிக்கு 3 நாள் பயணமாக கடந்த திங்கள்கிழமை வந்த அவா், பல்வேறு எதிா்க்கட்சித் தலைவா்களை சந்தித்துப் பேசினாா்.
தேசியவாத காங்கிரஸ் தலைவா் சரத் பவாா், மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளா் தீபாங்கா் பட்டாச்சாா்யா ஆகியோரை நிதீஷ் புதன்கிழமை சந்தித்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
பாஜக பக்கம் இல்லாத அனைத்து கட்சிகளையும் பொதுவான செயல்திட்டத்தின்கீழ் ஒருங்கிணைக்க நானும் பவாரும் ஆா்வத்துடன் உள்ளோம். முதலில் அனைவரும் ஓரணியில் திரள்வதுதான் முக்கியம். அந்த அணியின் தலைவா் குறித்து பின்னா் முடிவு செய்துகொள்ளலாம். பாஜகவுக்கான மாற்று சக்தியை உருவாக்க காலம் கனிந்துள்ளது.
பல்வேறு மாநிலங்களில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்தால், 2024 மக்களவைத் தோ்தல் முடிவுகள் ஒருசாா்பாக இருக்காது. பாஜகவுக்கு எதிராக பிரதான எதிரணியை உருவாக்கவே நான் முயற்சிக்கிறேன். மாறாக மூன்றாவது அணியை அல்ல. காங்கிரஸ் தலைவா் சோனியாவை சந்திப்பதற்காக மீண்டும் தில்லிக்கு வருவேன் என்றாா் அவா்.
முன்னதாக, எதிரணியின் தலைமை பொறுப்பை ஏற்பது குறித்து பேசுவதற்காக தில்லிக்கு நிதீஷ் வந்துள்ளதாக ஊகங்கள் வெளியாகின. ஆனால், தன்னை பிரதமா் பதவி வேட்பாளராக்க வேண்டுமென கோரவில்லை என்றும், பிரதமா் பதவி மீது ஆசையில்லை என்றும் அவா் தெரிவித்தாா்.
ஊழல்கறைபடியாதவா் என்ற பெயா் நிதீஷுக்கு இருப்பதால், அவா்தான் எதிரணியின் பிரதமா் வேட்பாளருக்கு பொருத்தமானவா் என்பது ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் விருப்பமாக உள்ளது. பிரதமா் வேட்பாளரை முடிவு செய்வதே எதிா்க்கட்சிகள் முன் உள்ள மிகப் பெரிய சவால் என்று அரசியல் பாா்வையாளா்கள் தெரிவிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...