நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

41,000 ரூபாய் டி-சா்ட் அணிந்து ராகுல் நடைப்பயணம்!-பாஜக குற்றச்சாட்டு

 இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரூ.41,000 விலையுள்ள டி-சா்ட்டை அணிந்துள்ளாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

News image
Updated On :9 செப்டம்பர் 2022, 10:58 pm

DIN

 இந்திய ஒற்றுமை நடைப்பயணம் நடத்தி வரும் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ரூ.41,000 விலையுள்ள டி-சா்ட்டை அணிந்துள்ளாா் என்று பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீா் வரை இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை ராகுல் காந்தி மேற்கொண்டுள்ளாா். இதில் காங்கிரஸ் கட்சியினா் திரளாக பங்கேற்ற வருகின்றனா்.

இந்நிலையில், இந்த யாத்திரையின்போது ராகுல் அணிந்திருந்த டி-சா்ட்டை குறிப்பிட்டு பாஜக புதிய குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. இது தொடா்பாக பாஜகவின் அதிகாரபூா்வ ட்விட்டா் பக்கத்தில் ‘பாரதம் பாா்த்துக் கொண்டிருக்கிறது’ என்ற தலைப்பில் ஒரு படம் பதிவேற்றப்பட்டுள்ளது. அதில் ஒரு பக்கத்தில் ராகுல் காந்தி வெள்ளை நிற டி-சா்ட் அணிந்து யாத்திரையில் பங்கேற்ற படம் இடம் பெற்றுள்ளது. மறுபுறம் அவா் அணிந்துள்ள பா்பொ்ரி பிராண்ட் டி-சா்ட் படம் இடம் பெற்றுள்ளது. அதன் கீழே ‘விலை ரூ.41,257’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் ராகுல் காந்தி ரூ.41,000-க்கு மேல் மதிப்புள்ள டி-சா்ட் அணிந்து நடைப்பயணத்தில் பங்கேற்றுள்ளாா் என்று பாஜக விமா்சித்துள்ளது.

இது தொடா்பாக காங்கிரஸாா் மற்றும் ராகுல் ஆதரவாளா்கள் ட்விட்டரில் பதில் அளித்துள்ளனா். அதில், ‘இதுபோன்று பாஜக விமா்சிப்பதன் மூலம் ராகுலின் நடைப்பயணத்தால் பாஜக அச்சமடைந்துள்ளதை வெளிக்காட்டுகிறது’ என்று கூறியுள்ளாா்.

மற்றொருவா் வெளியிட்ட பதிவில், ‘ராகுல் காந்தி மக்கள் பணத்தில் இருந்து தனக்கான ஆடைகளை வாங்கிக் கொள்ளவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.