நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

சட்டப்பேரவை முற்றுகை: மே. வங்க பாஜக தலைவர்கள் கைது

மேற்கு வங்க சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

News image
Updated On :13 செப்டம்பர் 2022, 7:51 am

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மம்தா பானர்ஜி தலைமையிலான அரசைக் கண்டித்து கொல்கத்தாவில் உள்ள சட்டப்பேரவையை முற்றுகையிடும் போராட்டத்தை பாஜக அறிவித்திருந்தது. இதற்காக ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொல்கத்தாவை நோக்கி வந்தனர்.

பிற இடங்களில் இருந்து முற்றுகை போராட்டத்திற்காக ரயில்கள், பேருந்துகள் மூலமாக கொல்கத்தா நோக்கி நேற்று முதலே பாஜகவினர் வந்து கொண்டுள்ளனர்.

இதனால், கொல்கத்தாவில் உள்ள ரயில் நிலையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு சோதனை செய்யப்பட்டு வருகின்றது. சட்டப்பேரவைக்கு செல்லும் சாலைகளும் தடுப்புகள் வைத்து தடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை நோக்கி பேரணியாக முற்றுகை போராட்டத்திற்கு வந்த பாஜக தலைவர்கள் சுவேந்து அதிகாரி, ராகுல் சின்ஹா, லாக்கெட் சாட்டர்ஜீ உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு கொல்கத்தாவில் உள்ள காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.