ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பேருந்து ஆழமான பள்ளத்தில் விழுந்ததில்11 பேர் பலியாகினர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர். விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என துணைநிலை ஆளுநர் இரங்கல் மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டம் சாவ்ஜியன் பகுதியில் இருந்து மண்டிக்கு சென்று கொண்டிருந்த பேருந்து ஒன்று திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ஆழமான பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இதில், 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் மற்றும் 8 பேர் காயமடைந்தனர்.
சம்பவம் நடந்த உடனேயே, உள்ளூர் மக்கள், தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் மற்றும் ராணுவத்தினர் இணைந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் இறந்தவர்களுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பூஞ்ச், சாவ்ஜியனில் நடந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தது அதிர்ச்சியும், வேதனை அளிப்பதாக உள்ளது. இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் நிவாரணம் வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு உயிர்காக்கும் உயர்தர சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை: வீடு, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை எவ்வளவு..?

நாகை-காங்கேசன்துறைக்கு இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து

லாரி மோதி முதியவா் உயிரிழப்பு

விபத்து வழக்கில் காா் ஓட்டுநருக்கு 2 ஆண்டுகள் சிறை
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

