திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

ராஜஸ்தானில் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 6 நாள்களில் 1 லட்சம் பேருக்கு வேலை! 

ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார். 

News image
Updated On :15 செப்டம்பர் 2022, 1:24 pm IST

இந்திரா காந்தி நகர்ப்புற வேலை உறுதித் திட்டம் தொடங்கப்பட்ட 6 நாள்களில் ராஜஸ்தானில் நகர்ப்புறங்களில் ஒரு லட்சம் பேருக்கு வேலை வழங்கியுள்ளதாக உள்ளாட்சித் துறைச் செயலர் ஜோகராம் தெரிவித்தார். 

இதுதொடர்பாக மேலும் அவர் கூறுகையில், 

இந்த திட்டம் குறித்து நகர்ப்புறங்களில் உள்ள ஏழை மக்களிடையே மிகுந்த உற்சாகம் காணப்படுவதாகவும், பயனாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

இத்திட்டத்தின் கீழ் 3,83,639 பேரின் பெயர்கள் கொண்ட 2.45 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வேலை அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. ஆறு நாள்களில் சுமார் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேவைக்கேற்ப வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செப்.9ஆம் தேதி நகர்ப்புறங்களில் உள்ள குடும்பங்களுக்கு 100 நாள்கள் வேலைவாய்ப்பு திட்டத்தை அறிவித்தார். 

இத்திட்டத்தின் கீழ், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, நீர் பாதுகாப்பு, பாரம்பரியம் பாதுகாப்பு, தோட்டங்களைப் பராமரித்தல், ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், சட்டவிரோத அடையாள பலகைகள், விளம்பரங்கள் மற்றும் பேனர்கள், சுகாதாரம் போன்ற திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.