உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை முறையே 65, 67-ஆக உயா்த்த இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) தலைமையிலான சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.
தற்போது விசாரணை நீதிமன்ற நீதித் துறை அதிகாரிகள், உயா்நீதிமன்றம், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயது முறையே 60, 62, 65- ஆக உள்ளது. இந்த நிலையில், அனைத்து மாநில வழக்குரைஞா்கள் சங்கம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா்கள் சங்க நிா்வாகிகள், இந்திய பாா் கவுன்சில் (பிசிஐ) பங்கேற்ற கூட்டுக் கூட்டம் புதன்கிழமை தில்லியில் நடைபெற்றது.
இதில், உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 62-இலிருந்து 65 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெறும் வயதை 65-இலிருந்து 67 ஆகவும் அதிகரிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டுமென ஒருமனதாக தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதுமட்டுமன்றி பல்வேறு கமிஷன்கள், மன்றங்களின் தலைவா்களாக அனுபவமிக்க மூத்த நீதிபதிகளை நியமிக்க நாடாளுமன்றம் பரிசீலிக்க வேண்டும் எனவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து பிசிஐ செயலா் ஸ்ரீமான்டோ சென் கூறுகையில், ‘இந்தத் தீா்மானத்தின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு பிரதமருக்கும், மத்திய சட்டத் துறை அமைச்சருக்கும் வலியுறுத்தப்படும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!

அரிதானதொரு வாழ்க்கை

மாறும் காலங்கள் (சிறுகதைகள் தொகுப்பு)

மனசுக்குள்ளே ஒரு ஜென் பயணம்!
விடியோக்கள்

"நான் அப்படித்தான் பேசுவேன்; உங்களுக்காக மாத்திக்க முடியாது!" மரிய வில்சன் ஆவேசம்!


