பள்ளிப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு , கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி பள்ளிப் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு , கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவு

மத்தியப் பிரதேசத்தில் மூன்றரை வயது சிறுமி பள்ளிப் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் அந்தப் பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தின் போபாலில் இந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையினை பொய்யாக்குவதாக உள்ளது. அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்தின் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்  என மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சௌகான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த அதிர்ச்சி சம்பவம் மத்தியப் பிரதேசத்தின் போபாலில் கடந்த செப்டம்பர் 8ஆம் தேதி அரங்கேறியுள்ளது. மூன்றரை வயதான பள்ளி சிறுமி அந்தப் பள்ளியின் பள்ளிப் பேருந்தின் ஓட்டுநரால் வாகனத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இதனையடுத்து, அந்த ஓட்டுநர் மற்றும் பள்ளிப் பேருந்தின் பெண் உதவியாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மத்தியப் பிரதேச மாநிலத்தின் முதல்வர் இன்று (செப்டம்பர் 15) கூறியதாவது: “ பெற்றோர்கள் குழ்ந்தைகளை கல்வி நிறுவனத்தின் மீதுள்ள நம்பிக்கையில் பள்ளிக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த நம்பிக்கையைக் காப்பாற்றுவது கல்வி நிறுவனங்களின் கடமை. பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ஓட்டுநர், அந்த பள்ளிப் பேருந்தின் பெண் உதவியாளர் மற்றும் அந்தப் பள்ளி நிர்வாகம் ஆகியோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.பள்ளி நிர்வாகம் அந்த ஓட்டுநரை அடையாளம் காண அதிகாரிகளுக்கு ஒத்துழைக்க வேண்டும்.

குழந்தைகளை இது போன்ற காட்டுமிராண்டித்தனமானவர்களிடம் அப்படியே விட்டுவிட முடியாது. பள்ளிப் பேருந்தில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்தப் பள்ளி செல்வாக்கு நிறைந்த ஒருவருடையது. பள்ளி நிர்வாகம் அதனால் நியாயமான முறையில் இந்த குற்றவாளிகளுக்கு தண்டனைப் பெற்றுத் தர வேண்டும். அப்போதுதான் மக்கள் செல்வாக்கு உடையவர்கள் தவறு செய்தாலும் அவர்களுக்கும் தண்டனை கிடைக்கும் என நம்புவார்கள். மேலும், போக்சோ சட்டம் குறித்து பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com