மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜம்மு-காஷ்மீர்: மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டில் குண்டு வெடிப்பு! 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

News image

கோப்புப்படம்

Updated On :16 செப்டம்பர் 2022, 8:01 am


ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் வீட்டிற்கு வெளியே குண்டுவெடிப்பு நிகழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

சூரன்கோட் தாலுகாவின் பஸ்லாபாத் கிராமத்தில் உள்ள மாவட்ட வளர்ச்சிக் குழு உறுப்பினர் சோஹைல் மாலிக்கின் வீட்டிற்கு வெளியே மர்ம முறையில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது. 

இந்த குண்டு வெடிப்பு குறைந்த தீவிரம் கொண்டதால், யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. 
,
வீட்டிற்கு வெளியே கார் நிறுத்துமிடத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்ததால், மாலிக்கின் கார் சேதமடைந்தாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்திற்கு காவல்துறை மற்றும் ராணுவ வீரர்கள் விரைந்து வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.