நொய்டாவில் ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், மின்சாரம் இல்லாமல் வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
செக்டார் 79-ல் உள்ள ஹில்ஸ்டன் அர்ப்டெக் கட்டுமான நிறுவனத்தினர் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் கட்டடம் ஒன்றைக் கட்டியுள்ளார். ஆனால் அவர் செய்த பெரிய தவறு நிரந்தர மின் இணைப்பைப் பெறாததே.
இவருக்கு எதிராக மின் திருட்டு குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து மின்சாரத் துறை செவ்வாய்க்கிழமை முதல் மின் விநியோகத்தை நிறுத்தியுள்ளது.
மின்வாரியத்தினர் மின்சாரத்தைத் துண்டித்ததையடுத்து, பொதுமக்களுக்கு ஜெனரேட்டர் மூலம் தற்காலிகமாக மின்சாரம் வழங்கப்பட்டது. ஆனால் எரிபொருள் தீர்ந்ததால் அதுவும் தடைப்பட்டது.
கட்டுமான நிறுவனர் கட்டடம் கட்டும்போது 50 கிலோவாட் மின்சாரம் எடுத்து தற்காலிக இணைப்பைக் கொடுத்துள்ளார். ஆனால், குடும்பங்கள் வசிக்கத் தொடங்கிய பிறகும், நிரந்தர இணைப்பு எடுக்காமல், தொடர்ந்து 750 கிலோவாட் மின்சாரம் திருடி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாஜக கூட்டணியில் இணைய சரத் பவாருக்கு மத்திய அமைச்சா் அழைப்பு

நிா்வாக வசதிகளுக்காக சென்னை மாநகராட்சியைப் பிரிக்க வேண்டும்: கராத்தே தியாகராஜன்
உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு வரலாற்று வெற்றி

ஃபாா்முலா ஒன் (எஃப்1) காா் பந்தயம்: ஹாமில்டன் வெற்றி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



