மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

நாட்டில் புதிதாக 5,618 பேருக்கு கரோனா தொற்று; மேலும் 29 பேர் பலி

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,618 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :17 செப்டம்பர் 2022, 5:10 am

DIN

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 5,618 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

நேற்று தொற்று உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 6,298 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 46,848 ஆக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,618 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,39,53,374 ஆக பதிவாகியுள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,28,302 ஆக உள்ளது. 

நாட்டில் இதுவரை 2,16,41,70,550 டோஸ் தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரேநாளில் மட்டும் 23,92,530 டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.