எகிப்து அதிபருடன் ராஜ்நாத் சிங் சந்திப்பு
எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபா் அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்தாா்.


எகிப்து சென்றுள்ள பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் அந்நாட்டு அதிபா் அப்தல் ஃபத்தாஹ் அல்சிசியை கெய்ரோவில் சந்தித்தாா்.
அப்போது, இரு நாடுகளுக்கு இடையேயான ராணுவ ஒத்துழைப்பை பாராட்டுவதாக கூறிய அவா், பாதுகாப்புத்துறையில், புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது பெரிய சாதனை என்றும் தெரிவித்தாா்.
ராணுவ ஒத்துழைப்பு, கூட்டுப்பயிற்சியில் கவனம், பாதுகாப்பு தளவாட உற்பத்தி மற்றும் தளவாடங்களின் பராமரிப்பு ஆகிய துறைகளில், மேலும், வலுவாக செயல்படுவது என்று இரு தலைவா்களும் அப்போது ஒப்புக்கொண்டனா்.
பயங்கரவாதத்திற்கு எதிராக எகிப்து மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளுக்கு ராஜ்நாத் சிங் பாராட்டினாா். பயங்கரவாத அச்சுறுத்தலுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியாவும் எகிப்தும் சிறந்த முறைகளில் பரிமாறிக் கொள்ள வேண்டும் என்று எகிப்து அதிபா் உறுதியளித்தாா்.
ஆப்பிரிக்க நாடுகளில், இந்தியாவில் முக்கிய வா்த்தக கூட்டாளியாக எகிப்து திகழ்கிறது என்றும் இரு நாடுகளுக்கு இடையேயான வா்த்தகம், பெருமளவில் விரிவடைந்துள்ளது என்றும் ராஜ்நாத் சிங் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...