வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி உரை

நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

News image
Updated On :20 செப்டம்பர் 2022, 9:36 am

DIN

நாடு முழுவதும் உள்ள பாஜக மேயர்கள் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.

குஜராத்தில் பாஜக மேயர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு இன்று காலை தொடங்கியது. இந்த மாநாட்டில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி மேயர்களுடன் உரையாற்றினார்.

பிரதமர் மோடி பேசியதாவது:

சர்தார் வல்லபாய் படேல் மேயராகதான் தனது பயணத்தை தொடங்கினார். சிறந்த இந்தியாவுக்கான அவரது பாதையை நாம் பின்பற்றி, வளர்ச்சிக்காக உழைக்க வேண்டும்.

இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களும் இப்போது பொருளாதார நடவடிக்கைகளின் மையமாக மாறி வருகின்றன. அந்த பகுதிகளில் தொழில் கட்டமைப்பை வளர்ப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிறு விற்பனையாளர்களும் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை முறையை பயன்படுத்துவது குறித்து பயிற்சி பெறுவதை மேயர்கள் உறுதி செய்ய வேண்டும்.

2014ஆம் ஆண்டில் 250 கிலோ மீட்டருக்கு குறைவாக போடப்பட்டிருந்த மெட்ரோ ரயில் பாதைகள் தற்போது 775 கிலோ மீட்டருக்கு அதிகமாக போடப்பட்டுள்ளது என்றார்.

இந்தக் கூட்டத்தில் மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, பாஜக மேயர்கள் மற்றும் துணை மேயர்கள் பங்கேற்றுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.