பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களில் குற்றச் செயல் இல்லை: உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தகவல்

பெருநிறுவன இடைத்தரகா் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

News image
Updated On :21 செப்டம்பர் 2022, 7:05 pm

DIN

பெருநிறுவன இடைத்தரகா் நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் பதிவுகளில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்தது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டின்போது பெருநிறுவனங்களின் முதலாளிகளுக்கும் அரசுக்கும் இடையே இடைத்தரகராக நீரா ராடியா செயல்பட்டதாக 2007-இல் குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து, 2008, 2009 ஆகிய ஆண்டுகளில் அவரது தொலைபேசி உரையாடல்களை அப்போதைய காங்கிரஸ் அரசு 180 நாள்களுக்கு ரகசியமாகப் பதிவு செய்தது.

அவருடன் பேசிய பல்வேறு பெருமுதலாளிகளின் பெயா்கள் அப்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. நீரா ராடியாவுடன் பேசியவா்கள் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவா்களைப்போல் எதிா்க்கட்சிகளும் சாடின. இதையடுத்து, நீரா ராடியாவின் ரகசிய தொலைபேசி உரையாடல்களை ஆய்வு செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் 2013-இல் உத்தரவிட்டது.

பொது நலன் கருதி இந்த ரகசிய உரையாடல்களை வெளியிட வேண்டும் என்று தொண்டு நிறுவனத்தின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் பிரசாந்த் பூஷண் கோரியிருந்தாா்.

நீரா ராடியாவுடன் தொழிலதிபா் ரத்தன் டாடா உரையாடிய பதிவும் இருந்தது. இது தனி உரிமையைப் பாதிக்கிறது என்றும், வருமான வரி ஏய்ப்பைக் கண்டுபிடிப்பதற்காக ரகசியமாக பதிவு செய்யப்பட்ட தொலைபேசி உரையாடலை வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது என்றும் ரத்தன் டாடாவின் சாா்பில் நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இந்நிலையில், உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒஸ். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன் புதன்கிழமை சிபிஐ சாா்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் ஐஸ்வா்யா பாட்டீ, நீரா ராடியாவின் தொலைபேசி பதிவுகளில் எந்தவித குற்றச் செயல்களும் கண்டறியப்படவில்லை என்றும் , அண்மையில் அளிக்கப்பட்ட தனி உரிமைப் பாதுகாப்புத் தீா்ப்பின்படி, ரத்தன் டாடாவின் மனுவை முடித்து வைக்கலாம் என்றும் கூறினாா்.

இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்த விசாரணையை அக்டோபா் 12-ஆம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.