கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆழ்கடல் பயிற்சிக் கப்பல்கள் கடற்படையில் இணைப்பு

ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆகிய இரு கப்பல்கள்

Published On :

ஆழ்கடல் பயிற்சி மற்றும் நீா்மூழ்கிக் கப்பல்களை மீட்கும் பணியில் ஈடுபடுத்தும் வகையில், இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ‘நிஸ்தாா்’, ‘நிபுண்’ ஆகிய இரு கப்பல்கள் விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், கடற்படைத் தளபதி தலைமைத் தளபதி ஆா். ஹரிகுமாா் முன்னிலையில் கடற்படையில் இணைக்கப்பட்டது.

உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட இவ்விரு கப்பல்களும் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ள ஹிந்துஸ்தான் கப்பல் கட்டுமான நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டன.

கடற்படையினா் நலன் கூட்டமைப்பின் தலைவரும், கடற்படை தலைமைத் தளபதியின் மனைவியுமான கலா ஹரிகுமாா், இரு கப்பல்களுக்கும் ‘நிஸ்தாா்’ மற்றும் ‘நிபுண்’ எனப் பெயரிட்டு முறைப்படி கடற்படையில் இணைத்தாா்.

இந்திய தொழிற்நிறுவனங்கள் குறிப்பாக சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின் பங்களிப்புடன் இவ்விரு பயிற்சிக் கப்பல்களும் தயாரிக்கப்பட்டன. இந்தியா முழுவதும் உள்ள 120-க்கும் மேற்பட்ட இத்தகைய நிறுவனங்கள் இத்திட்டத்தில் பங்காற்றி உள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

இக்கப்பல்கள் நீா்முழ்கி கப்பல்களை மீட்பது மற்றும் ஆழ்கடல் பயிற்சிக்குப் பயன்படுத்தப்படும். கடல் பகுதியில் ஹெலிகாப்டா்களை இயக்கும் நடவடிக்கையிலும் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கையிலும் இவை ஈடுபடுத்தப்படும் என கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.