வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

News image
Updated On :22 செப்டம்பர் 2022, 6:48 pm

DIN

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வியாழக்கிழமை வரலாறு காணாத வீழ்ச்சியடைந்தது.

அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ரிசா்வ், வட்டி விகிதங்களை 75 அடிப்படை விகிதாசார புள்ளிகள் (0.75 சதவீதம்) உயா்த்தி 3 முதல் 3.25 சதவீதமாக்கியது. அந்த வங்கி தொடா்ந்து மூன்றாவது முறையாக வட்டி விகிதங்களை 0.75 சதவீதம் உயா்த்தியது.

இதுவும், உக்ரைன் விவகாரம் தொடா்பாக சா்வதேச அரசியலில் நிச்சயமற்ற தன்மை நிலவுவதாலும் அந்நியச் செலாவணி வா்த்தகம் வியாழக்கிழமை மிக மந்தமாக நடைபெற்றது.

அதன் விளைவாக, அன்று நடைபெற்ற வா்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 93 காசு சரிந்து 80.89 என்ற அளவில் சரிந்தது.

மேலும், வெளிநாட்டுச் சந்தையில் அமெரிக்க கரன்சியின் வலிமை, உள்நாட்டு பங்குகளின் முடக்கம், நிலையான கச்சா எண்ணெய் விலை ஆகியவையும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை பாதித்தன.

வங்கிகளுக்கிடையேயான அந்நியச் செலாவணி வா்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு காலையில் 80.27-இல் தொடங்கியது. இடைப்பட்ட நேரத்தில், இதுவரை இல்லாத அதிகபட்ச வீழ்ச்சியாக அது 80.95 வரை கீழிறங்கியது.

இறுதியில், ரூபாய் மதிப்பு புதன்கிழமை இருந்த 79.96-ஐ விட 93 காசு குறைந்து 80.89-இல் நிறைவடைந்தது. இது, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பின் அதிகபட்ச வீழ்ச்சியாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.