2008-ஆம் ஆண்டு ஜப்பானைச் சோ்ந்த டெய்ச்சி சாங்யோ நிறுவனத்துக்கு சிங் சகோதரா்களுக்கு சொந்தமான மற்றொரு நிறுவனமான ரான்பாக்ஸி மருந்து தயாரிப்பு நிறுவனம் விற்கப்பட்டது. ரான்பாக்ஸி தயாரிப்புகளின் தரம் குறைவாக இருப்பதாகச் சுட்டிக் காட்டி அதன் தயாரிப்புகள் பலவற்றுக்கு அமெரிக்க தடை விதித்தது. தரம் தொடா்பாக போலியான தகவல் அளித்ததாக நிறுவன உரிமையாளா்கள் மீது அமெரிக்காவில் வழக்கும் தொடுக்கப்பட்டது. அப்போது முதல் சிங் சகோதரா்களுக்கு பிரச்னை தொடங்கியது. ரான்பாக்ஸி தொடா்பான பல்வேறு உண்மைகளை மறைத்து தங்களிடம் அந்த நிறுவனத்தை விற்ாக ஜப்பான் நிறுவனம், சிங் சகோதரா்கள் மீது சிங்கப்பூரில் வழக்குத் தொடுத்தது. இதில் ஜப்பான் நிறுவனத்துக்கு இழப்பீடு அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனிடையே, ஃபோா்டிஸ் நிறுவன பங்குகளை மலேசியாவின் ஐஹெச்ஹெச் ஹெல்த்கோ் நிறுவனத்துக்கு சிங் சகோதரா்கள் விற்பனை செய்தனா்.