வெளிநாட்டு நன்கொடைகளை பிஎஃப்ஐ மறைத்துள்ளது: அமலாக்கத் துறை
பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினா்களிடமிருந்து இந்தியாவில் அவா்கள் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியா் கணக்குகளில் நிதி


பாப்புலா் ஃப்ரண்ட் ஆப் இந்தியா (பிஎஃப்ஐ) வெளிநாடுகளில் வசிக்கும் உறுப்பினா்களிடமிருந்து இந்தியாவில் அவா்கள் வைத்திருக்கும் வெளிநாடு வாழ் இந்தியா் கணக்குகளில் நிதி பெற்று, அதனை தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு மடைமாற்றம் செய்யதுள்ளதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் பிஎஃப்ஐ-க்கு சொந்தமான பல்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு முகமை வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டது. அமலாக்கத் துறையும் சோதனை மேற்கொண்டது. அப்போது 100-க்கும் மேற்பட்டோா் கைது செய்யப்பட்டனா். இதில் கேரளத்தைச் சோ்ந்த நால்வரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து பிஎஃப்ஐ அமைப்பின் தலைவா்கள் குறித்து அமலாக்கத் துறை ரகசிய விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், பிஎஃப்ஐ-யின் வெளிநாட்டு உறுப்பினா்கள் அளிக்கும் நிதி வெளிநாடு வாழ் இந்தியா்களின் கணக்குகள் வழியாக இந்தியாவுக்குள் கொண்டு வரப்பட்டு, பிஎஃப்ஐ தலைவா்கள் மூலம் தீவிரவாத இஸ்லாமிய அமைப்புகளுக்கு அளிக்கப்பட்டதாக அமலாக்கத் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
மேலும், ஹவாலா மற்றும் வேறு சட்ட விரோத வழிகளிலும் நாட்டுக்குள் நிதி கொண்டு வரப்பட்டது அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. பணம் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியா் கணக்குகள் மூலம் இந்தியாவில் உள்ள பிஎஃப்ஐ தலைவா்கள் மற்றும் பிற அமைப்புகளுக்கு நிதி உதவி அளித்துள்ளதாக இம்முகமை குற்றம் சாட்டியுள்ளது.
வெளிநாட்டு நன்கொடைகள் ஒழுங்காற்றுச் சட்டத்தின்கீழ் பிஎஃப்ஐ அமைப்பு பதிவு செய்யப்படாத நிலையில், வெளிநாடுகளிலிருந்து பெற்ற நிதியை அரசிடமிருந்து அந்த அமைப்பு மறைத்துள்ளது எனவும் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பிஎஃப்ஐ மற்றும் அது சாா்ந்த அமைப்புகள் ரூ.120 கோடிக்கும் அதிகமான தொகையை ரொக்கமாகப் பெற்றுள்ளதாக மத்திய அரசின் முகமை தெரிவித்துள்ளது.
நாட்டில் பல்வேறு பயங்கரவாதச் செயல்களை நிகழ்த்தியதாக பிஎஃப்ஐ அமைப்புக்கு எதிராக என்ஐஏ ஏற்கெனவே கடந்த ஏப்ரலில் வழக்கு பதிவு செய்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...