
உத்தரப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க முயன்ற இரண்டு மேய்ப்பாளர்கள் மூச்சுத் திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இறந்தவர்கள் தரம் சிங் (22) மற்றும் அவரது மாமா சர்மன் (55) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக கோவர்தன் காவல் நிலைய அதிகாரி கூறுகையில்,
வெள்ளிக்கிழமை வழக்கம்போல் தங்கள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர். திரும்பிவரும்போது ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த ஆட்டுக்குட்டியை மீட்க தரம்சிங் இறங்கியுள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் திரும்பாததால், சர்மனும் ஆழ்துளைக் கிணற்றில் இறங்கினார். அவரும் திரும்பவில்லை.
பின்னர், கிராமத்தினர் காவல்நிலையத்தில் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் 2 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இருவரையும் வெளியே எடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரும் மூச்சுத் திணறல் ஏற்பட்ட ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.