வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

ஹிமாசல் சாலை விபத்து: பிரதமர் மோடி இரங்கல்!

ஹிமாசலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 செப்டம்பர் 2022, 6:10 am

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் குலுவில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

பிரதமர் டிவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், 

குலுவில் சுற்றுலா வாகனம் பள்ளத்தில் விழுந்த சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது.இந்த விபத்தில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.இதனுடன் அனைத்து உதவிகளும் செய்யப்பட்டு வருகிறது. காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன் என்று பிரதமர் பதிவிட்டுள்ளார். 

ஞாயிறன்று குலு மாவட்டத்தின் பஞ்சார் பள்ளத்தாக்கின் கியாகி பகுதியில் சுற்றுலா வாகனம் ஒன்று குன்றிலிருந்து கீழே கவிழ்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர் மற்றும் 10 பேர் காயமடைந்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.