சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கால்பந்து விளையாடிய ராகுல் காந்தி: வைரலாகும் விடியோ

ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கால்பந்து விளையாடும் விடியோ வைரலாகி வருகின்றது.

News image
Updated On :26 செப்டம்பர் 2022, 9:35 am

DIN

ஒற்றுமைக்கான நடைப்பயணத்தின் போது சிறுவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கால்பந்து விளையாடும் விடியோ வைரலாகி வருகின்றது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறாா். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

இன்று காலை பாலக்காடு மாவட்டத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கிய நிலையில், கால்பந்துகளுடன் சிறுவர்களும் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றனர்.

Story image

சிறுவர்கள் அனைவரும் கால்பந்து விளையாடிக் கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்களுடன் ராகுல் காந்தி கால்பந்து விளையாடினார். அந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது.

மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.