நட்புப் பயணம்: 2 தென்கொரிய கடற்படை கப்பல்கள் சென்னை வந்தன

நட்புப் பயணமாக, தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஆர்ஓகேஎஸ் வகை கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.
கோப்பிலிருந்து..
கோப்பிலிருந்து..


சென்னை: நட்புப் பயணமாக, தென்கொரிய கடற்படையைச் சேர்ந்த இரண்டு ஆர்ஓகேஎஸ் வகை கப்பல்கள் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளன.

புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை இவ்விரு கப்பல்களும் சென்னை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கும். இந்த இரு கப்பல்களிலும், கொரியன் கடற்படை கல்வி மையத்தில் இறுதியாண்டு பயிலும் 164 மாணவர்கள் உள்பட 470 மாலுமிகள் வந்திருப்பதாக தென்கொரிய தூதரம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பும், 2014 மற்றும் 2015ஆம் ஆண்டுகளில் தென்கொரியாவின் ஆர்ஓகேஎன் கப்பல்கள் சென்னை வந்துள்ளது. தென் கொரிய கடற்படை கப்பல்கள் பயிற்சிக்காக சென்னை வந்திருப்பது இது மூன்றாவது முறையாகும்.

இந்த பயணத்தின் போது, கொரிய கடற்படை தரப்பிலிருந்து, மெரினா கடற்கரையை தூய்மை செய்தல், ஹிந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி மற்றும் சயின்ஸ் நிறுவனத்தில் பல்வேறு கலாசார நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிட்டவற்றிலும் ஈடுபடுவார்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com