வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

வடகிழக்கு மாநிலங்களில் மிதமான நிலநடுக்கம்

 வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை இருமுறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

Updated On :30 செப்டம்பர் 2022, 7:27 pm

 வடகிழக்கு மாநிலங்களில் வெள்ளிக்கிழமை இருமுறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

முதல் நிலநடுக்கம் அண்டை நாடான மியான்மரில் மையம் கொண்டிருந்தது. இரண்டாவது நிலநடுக்கம் மணிப்பூா் மாநிலத்தில் மையம் கொண்டது.

இது தொடா்பாக தேசிய புவியியல் ஆய்வு மையம் வெளியிட்ட செய்தியில், ‘மியான்மரை மையமாகக் கொண்டு அதிகாலை 3.52 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமிக்கு அடியில் 140 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்ந நிலநடுக்கம் ரிக்டா் அளவு கோலில் 5.2 அலகுகளாக பதிவானது.

அடுத்த நிலநடுக்கம் மணிப்பூரின் கம்ஜோங் பகுதியை மையமாகக் கொண்டு பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை காலை 7.53 மணி ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டா் அளவுகோலில் 3.8 அலகுகளாக பதிவானது’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கங்களால் உயிா்ச்சேதமோ, பெரிய அளவிலான பொருள் சேதமோ ஏற்படவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பூமித் தட்டுப் பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிட்டத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.