ட்விட்டரில் எடிட் செய்யும் வசதி விரைவில் அறிமுகம்?

ட்விட்டரில் பதிவை திருத்தம் செய்ய எடிட் பட்டனை பயன்படுத்தும் வசதி சோதனை முறையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

ட்விட்டரில் பதிவை திருத்தம் செய்ய எடிட் பட்டனை பயன்படுத்தும் வசதி சோதனை முறையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் அறியப்படும் பிரபல சமூகவலைத்தளமாக உள்ளது ட்விட்டர் நிறுவனம். சாதாரணமானவர்கள் தொடங்கி முக்கிய பிரபலங்கள் வரை அனைவரும் ட்விட்டர் செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ட்விட்டரில் பதிவு செய்த பதிவை மீண்டும் திருத்தம் செய்யும் வசதி சோதனை முறையில் உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தின் அதிகமான பங்குகளைக் கைப்பற்றியதன் மூலம் அதன் நிர்வாகக் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

ட்விட்டர் நிறுவனத்தின் கொள்கை முடிவுகளை மேற்கொள்ளும் இந்த நிர்வாகக் குழுவில் எலான் மஸ்க் இடம்பெற்றுள்ளது முக்கியக் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக உண்மையான ஜனநாயகத்திற்கு கருத்து சுதந்திரம் அவசியம் எனப் பதிவிட்டிருந்த எலான் மஸ்க் புதிய சமூக வலைத்தளம் தேவையா எனக் கேட்டிருந்தார்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டர் பதிவில் அவர் எடிட் பட்டன் வேண்டுமா எனக் கேட்டது மீண்டும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com