வருகிற ஏப்ரல் 24 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதுச்சேரி வரவிருப்பதாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 24 ஆம் தேதி புதுச்சேரியில் நடக்கவிருக்கும் பொது நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் புதுச்சேரி வரவுள்ளதாக தமிழிசை கூறியுள்ளார்.
புதுச்சேரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற நடைபயண விழிப்புணர்வு நிகழ்வு ஆளுநர் மாளிகை முன்பு சனிக்கிழமை நடைபெற்றது. துணை நிலை ஆளுநர்(பொ) தமிழிசை சௌந்தரராஜன் இந்நிகழ்வை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாம் உடல் நலத்தோடு, மன நலத்தையும் பேணி காக்க வேண்டும். அதற்கு தினசரி உடற்பயிற்சி செய்ய வேண்டும். பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் சந்தித்தது மகிழ்ச்சி. இருவரும் புதுச்சேரி மீது அக்கறை, ஆர்வம் கொண்டுள்ளார். பிரதமர், உள்துறை அமைச்சரும் புதுச்சேரிக்கு பல்வேறு திட்டங்களை கொண்டுவர உறுதுணையாக இருக்கின்றார்கள்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப். 24 ம் தேதி புதுச்சேரிக்கு வருகை தருகின்றார். தில்லிக்கு, முதலமைச்சரை தவிர்த்துவிட்டு சென்றதாக நினைக்க வேண்டாம், நாங்கள் இணைந்துதான் செயல்பட்டு வருகின்றோம். புதுவை மக்களுக்காக செயல்பட்டு வருகின்றோம். புதுச்சேரிக்கு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகின்றோம்.
புதுச்சேரி கரோனா இல்லாத மாநிலமாக இருந்தாலும் தனி மனித இடைவெளி , கை தூய்மை, முகக்கவசம் அணிவது, சிறிது காலம் தொடர வேண்டும் என்று தெரிவித்தார்.
இரு தினங்களுக்கு முன்பாக, தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை நேரில் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!

எதிரிகளுக்கு மாரடைப்பே ஏற்படும்! - அதிநவீன ஆயுதத்தை களமிறக்குவதாக ஈரான் எச்சரிக்கை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

