அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்

நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையடையச் செய்துள்ளது.
அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்
அடுத்த அலை உருவாகுமா? கேள்விக்குக் கிடைத்த நல்ல பதில்


சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் கரோனா பரவல் தலைவிரித்தாடும் நிலையில், நாட்டில் கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தி இரண்டு வார காலத்துக்குள் மீண்டும் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருப்பது கவலையடையச் செய்துள்ளது.

இதுவரை உலக நாடுகளில் மட்டுமே கரோனா பாதிப்பு அதிகரித்திருந்தது. ஆனால், தற்போது நாட்டுக்குள்ளும் அந்த தாக்கம் ஏற்பட்டுள்ளது. தில்லி, ஹரியானா, குஜராத், கேரளம் மற்றும் மிசோரம் மாநிலங்களிலும் இதுவரை இறங்குமுகமாக இருந்த கரோனா பாதிப்பு எரிபொருள் விலை போல இல்லாவிட்டாலும் ஏறுமுகத்தைக் காட்டியிருப்பது நமக்கெல்லாம் அந்த முகக்கவசம் அணிந்திருக்கும் பழைய முகத்தை நினைவுபடுத்துவதாக உள்ளது.

இது குறித்து கரோனா தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஜெயப்பிரகாஷ் முளியில் கூறுகையில், இது ஒரு திடீரென ஏற்பட்ட மாற்றம். அதுவும் ஒரு சதவீதத்துக்கும் குறைவான பாதிப்புதான். இதை வைத்து மட்டும், அடுத்த அலை உருவாகிவிடும் என்று கூறிவிட முடியாது என்கிறார்.

இதேக் கருத்தைத்தான், பொது சுகாதார அறக்கட்டளை அமைப்பின் தலைவர் பேராசிரியர் கே.எஸ். ரெட்டியும் கூறுகிறார். அடுத்த அலை உருவாகும் என்று இவ்வளவு விரைவாகக் கூறிவிட முடியாது. தற்போது தளர்வுகள் அளிக்கப்பட்டு ஒட்டுமொத்த மக்களும் சுதந்திரமாக வெளியே வருகறிர்கள். அப்போது ஒரு திடீர் அதிகரிப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார்.

அதேவேளையில், ஐஐடி-கான்பீர், ஜூன் இறுதியில் நாட்டில் நான்காவது அலை உருவாகும் என்றும், ஆகஸ்ட் மாதத்தில் தீவிரமடையும் என்றும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் மறுஆய்வுக்குள்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பல நாடுகளிலும் இப்படி எண்ணிக்கை சற்று அதிகரித்து மீண்டும் குறையத் தொடங்கியது. எனவே, சற்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்கிறார் ஐஐடி-கான்பூரைச் சேர்ந்த டாக்டர் அகர்வால்.

மேலும், இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1000 - 1200 புதிய கரோனா பாதிப்பு பதிவாகிறது. சில மாநிலங்களில் 100 - 150 நோயாளிகள் நாள்தோறும் புதிதாக பதிவாகிறது. இது குறைந்தபட்ச எண்ணிக்கைதான். எனவே நாம் தற்போது அச்ச உணர்வை ஏற்படுத்தக் கூடாது என்கிறார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com