அசாமில் கனமழை மற்றும் புயல் காரணமாக 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
அசாமில் புயல் காரணமாக கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து அங்கு மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மார்ச் மாத இறுதியில் இருந்து அசாம் முழுவதும் கடுமையான புயல் மற்றும் கனமழை காரணமாக குறைந்தது 20 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி ஜி.டி.திரிபாதி கூறுகையில், தரவுகளின்படி கடந்த மூன்று நாள்களில் 22 மாவட்டங்களில் 80 வருவாய் வட்டங்களில் புயல் மற்றும் கனமழையால் ஏற்பட்ட மின்னலால் உயிர்ப்பலி பதிவாகியுள்ளது. அதில் மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களுக்கு மாநில அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படுகிறது. கனமழை மற்றும் புயலினால் 1,410 கிராமங்களில் 95,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஆயிரக்கணக்கான வீடுகளும் சேதமடைந்துள்ளன என்றார்.
அதுபோல மொத்தம் 1,333 ஏக்கர் விளைநிலங்கள் சேதமாகியுள்ளதாக மாவட்ட நிர்வாகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
புயல் காரணமாக பல்வேறு பகுதிகளில் மீட்புப் பணிகள் முடக்கிவிடப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

புதுச்சேரியில் தொகுதி பங்கீட்டில் காங்கிரஸ் - திமுக இடையே தொடரும் இழுபறி!

அசாம்: பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த அமைச்சர்!

இந்த நாள் நல்ல நாள்!

வாக்குக்கு பணம் தரும் வேட்பாளரை புறக்கணிப்போம்: மீனவ கிராமத்தில் எச்சரிக்கை பதாகை
வீடியோக்கள்

இசை ஆல்பத்தில் ரிஷி தேவா!
தினமணி வீடியோ செய்தி...

ஈரான் போர், பெருந்தொற்று காலத்துக்கு இழுத்துச் செல்கிறதா?: சுமந்த் ராமன் கவலை | US Israel Iran War |
தினமணி வீடியோ செய்தி...

Podcast | திமுக கூட்டணி: நீடிக்கும் சிபிஐஎம்; வெளியேறிய தவாக | News and Views | Epi - 17 | Sarathkumar
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியிலிருந்து விலகிய த.வா.க! Velmurugan பேட்டி | DMK Alliance
தினமணி வீடியோ செய்தி...

