இதுதான் குரு தட்சிணையா? மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்த 47 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது
மாணவிகளுக்கு தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது


ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் பலோட் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் பணியாற்றி வந்த 47 வயது ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். விளையாட்டு பயிற்சி அளித்து வந்த ஆசிரியர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

கபடி மற்றும் கோ-கோ போன்ற விளையாட்டுகளில் பள்ளி சார்பில் மாணவிகளுக்கு பயிற்சி அளித்து வந்த ஆசிரியர், மாணவிகளை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும், விளையாட்டில் பெரிய இடத்துக்கு மாணவிகளைக் கொண்டு வருவதற்கு ஆசிரியருக்கு அளிக்கும் குரு தட்சணைதான் இது என்று ஆசிரியர் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் கூறிவந்ததும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் கணித ஆசிரியராக இருந்துள்ளார். ஆனால் கூடுதலாக மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் பயிற்சியும் அளித்து வந்துள்ளார். பயிற்சியின் போது குறிப்பாக மாணவிகளை அவர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகக் காவல்துறையினர் கூறுகிறார்கள்.

இது தொடர்பாக ஐந்து மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் சார்பில் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.  ஆசிரியர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்படுத்தப்பட்டுள்ளார். 

பயிற்சியின்போதும், செல்லிடப்பேசியிலும் அவர் மிக மோசமாக பேசி வந்ததையும் மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் கோ-கோ விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் மாணவி ஒருவரை செல்லிடப்பேசியில் அழைத்த அந்த ஆசிரியர், வீட்டுக்கு வருமாறு கூறியுள்ளார். இதை அவரது தாயார் கவனித்துவிட்டு, செல்லிடப்பேசியை ஸ்பீக்கரில் போட்டு பேசுமாறு கூறியுள்ளார். அப்போதுதான் அந்த ஆசிரியர் மாணவியிடம் தகாத வார்த்தைகளை பேசியதை தாயார் அறிந்து கொண்டு உடனடியாக மாணவியிடம் நடந்த விஷயங்களைக் கேட்டறிந்துள்ளார்.

பிறகு அந்த தாயார் இதர மாணவிகளைத் தொடர்பு கொண்டு கேட்ட போது அவர்களும் தாங்கள் இந்த ஆசிரியரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வந்ததும், இதனை குரு தட்சணையாக செய்ய வேண்டும் என்று ஆசிரியர் கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளனர்.

ஆசிரியரின் குடும்பத்தினர் மாணவியின் பெற்றோரிடம் மன்னிப்புக் கேட்டு காவல்நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். ஆனால், நீதி கிடைக்க வேண்டும் என்பதில் பெற்றோர் உறுதியாக இருந்ததால் காவல்நிலையத்தில் புகார் செய்து ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com