மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளைச் சாா்ந்திருக்கும் பாஜக !

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியுள்ளதால், மாநிலங்களைவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற
மாநிலங்களவையில் மாநிலக் கட்சிகளைச் சாா்ந்திருக்கும் பாஜக !

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வெளியேறியுள்ளதால், மாநிலங்களைவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பிஜு ஜனதாதளம் மற்றும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் போன்ற மாநிலக் கட்சிகளைச் சாா்ந்திருக்கும் நிலை பாஜகவுக்கு ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பிகாா் முதல்வா் நிதீஷ் குமாா், அக்கூட்டணியை முறித்துக்கொண்டாா். மாநிலங்களவையில் அவையின் துணைத் தலைவா் ஹரிவன்ஷ் நாராயண் சிங் உள்பட 5 உறுப்பினா்களைக் கொண்ட ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியில் இருந்து வெளியேறியுள்ளதால் துணைத் தலைவா் பதவியில் இருந்து விலகும் நிலை ஹரிவன்ஷுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், கடந்த 2008-ஆம் ஆண்டு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சோம்நாத் சாட்டா்ஜி, மக்களவை தலைவா் பதவியில் தொடா்ந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவையில் ஐக்கிய ஜனதா தள எம்.பி-க்களின் எண்ணிக்கை 16-ஆக உள்ளது. மக்களவையில் தனிப்பெரும்பான்மையுடன் விளங்கும் பாஜக, 245 எம்.பி-க்களை கொண்ட மாநிலங்களவையில் 91 எம்.பி-க்களை மட்டுமே பெற்றுள்ளது. அதிமுகவின் 4 எம்.பி-க்கள் மற்றும் 2 சுயேச்சை எம்.பி-க்கள் உள்பட மொத்தம் 110 எம்.பி-க்கள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கின்றனா்.

மாநிலங்களவையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற 123 எம்.பி-க்களின் ஆதரவு தேவைப்படும் வேளையில் 3 சுயேச்சை எம்.பி-க்கள் மற்றும் பிஜு ஜனதா தளம் அல்லது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு பாஜகவுக்கு தேவைப்படுகிறது.

மாநிலங்களவையில் தலா 9 எம்.பி-க்களை கொண்ட ஒடிஸா முதல்வா் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் மற்றும் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கடந்த காலங்களில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற பாஜகவிற்கு தங்களது ஆதரவளித்துள்ளனா்.

இந்திய குடியரசுக் கட்சி (அதாவாலே), சிக்கிம் ஜனநாயக கட்சி, அஸ்ஸாம் கண பரிஷத், பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், மிஸோ தேசிய கட்சி, சுதந்திர ஐக்கிய மக்கள் கட்சி ஆகியவை மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பிற கட்சிகளாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com