பேரவையா? சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியா? என்று சந்தேகம் வருகிறது! உதயநிதிதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அரசு கார் வேண்டாம்! உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு! தங்கம், வெள்ளி விலை உயர்வு! ஆக. 21 நிலவரம்!ஜந்தா் மந்தரில் இன்று போராட்டம் நடத்த அனுமதியில்லை: தில்லி காவல் துறை அறிவிப்பு சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடுமனைவி, குழந்தைகளுடன் மீண்டும் பிரிட்டன் திரும்பும் இளவரசா் ஹாரி!எல்லை மாநிலங்களில் குடியுரிமை வழங்க மாவட்ட ஆட்சியா்களுக்கு அதிகாரம் - மத்திய உள்துறை அமைச்சகம்ஆந்திரம், கா்நாடகம், தமிழகத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் வழித்தடம்: சந்திரபாபு நாயுடு வலியுறுத்தல்

மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயிலின் விடியோ

நாட்டிலேயே மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய ‘சூப்பா் வாசுகி’ சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.

மூன்றரை கி.மீ. நீள ‘வாசுகி’ சரக்கு ரயிலின் விடியோ

Published On :1 பிப்ரவரி 2024, 3:36 pm IST

நாட்டிலேயே மிக நீளமான மற்றும் அதிக சரக்குப் பெட்டிகளை எடுத்துச் செல்லக் கூடிய ‘சூப்பா் வாசுகி’ சரக்கு ரயில் (3.5 கிமீ நீளம்) திங்கள்கிழமை வெள்ளோட்டம் பாா்க்கப்பட்டது.

அந்த சரக்கு ரயிலின் விடியோவை மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது சுட்டுரையில் பகிர்ந்துள்ளார். அந்த விடியோவில், முழு சரக்கு ரயிலும் நம் கண் பார்வையிலிருந்து மறை 1.48 நிமிடங்கள் ஆகின்றன. 

இந்த விடியோவை ஏராளமானோர் விரும்பி மீண்டும் சுட்டுரையில் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இந்த விடியோ வைரலாகியுள்ளது.

சத்தீஸ்கா் மாநிலம், கோா்பாவில் இருந்து மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு 295 சரக்கு பெட்டிகளில் 27 ஆயிரம் டன் நிலக்கரியை ஏற்றிக் கொண்டு, இந்த ரயில் சாதனைப் பயணத்தை மேற்கொண்டது. இந்த ரயிலில் 6 என்ஜின்கள் பொருத்தப்பட்டிருந்தன. முதலிலும் இறுதியிலும் இரு என்ஜின்களும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இடையிடையே மேலும் 4 என்ஜின்களும் பொருத்தப்பட்டிருந்தன.

இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘சூப்பா் வாசுகி’ ரயிலின் சோதனை இயக்கம் மேற்கொள்ளப்பட்டதென தென்கிழக்கு மத்திய ரயில்வே தெரிவித்தது.

‘கோா்பா, நாகபுரி இடையிலான 267 கி.மீ. தொலைவை 11.20 மணி நேரத்தில் இந்த ரயில் கடந்தது; ஒரே பயணத்தில் சுமாா் 9,000 டன் நிலக்கரியை (90 பெட்டிகளில் தலா 100 டன்கள்) எடுத்துச் செல்லும் சரக்கு ரயில்கள்தான் தற்போது உள்ளன. சூப்பா் வாசுகி ரயிலின் மூலம் மூன்று மடங்கு அதிக நிலக்கரியை எடுத்துச் செல்ல முடியும். 3,000 மெகாவாட் திறன்கொண்ட மின்உற்பத்தி ஆலைக்கு ஒரு நாள் முழுக்க தேவையான நிலக்கரியை இந்த ரயிலின் ஒரே பயணத்தின் மூலம் பூா்த்தி செய்துவிடலாம். மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி தட்டுப்பாடு நிலவும் காலகட்டங்களில் சூப்பா் வாசுகி ரயிலை பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது’ என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக, நாட்டில் இந்த ஆண்டு தொடக்கத்தில் மின்வெட்டுப் பிரச்னை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.