தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா
தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே அரவிந்த் கேஜரிவால், மணீஷ் சிசோடியா

தில்லி சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு!

தில்லி சட்டப்பேரவையில் நாளை (ஆக.30) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி - பாஜக இடையே ஏற்பட்ட அமளி காரணமாக தில்லி சட்டப்பேரவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


தில்லி சட்டப்பேரவையில் நாளை (ஆக.30) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது. ஆம் ஆத்மி - பாஜக இடையே ஏற்பட்ட அமளி காரணமாக தில்லி சட்டப்பேரவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை பாஜகவால் பேரம் பேச முடியாது என்பதை சுட்டிக்காட்டும் வகையிலும், பாஜகவின் 'ஆபரேஷன் லோட்டஸ்' திட்டம் தில்லியில் தோல்வியடைந்தது என்பதை நிரூபிக்கும் வகையிலும் தில்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு அரவிந்த் கேஜரிவால் அழைப்பு விடுத்தார். 

தில்லி சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஆம் ஆத்மி - பாஜக கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டி பேசியதால், அவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. இன்று முழுவதும் மூன்று முறை பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

மேலும், தில்லி துணை நிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா, ஊழலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டி அவருக்கு எதிராக பதாகைகளை ஏந்தியவாறு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

ஊழல் முறைகேடுகளை மறைப்பதற்கும், சோதனை நடவடிக்கைகளை திசைதிருப்புவதற்கும் ஆம் ஆத்மி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பாஜக எம்.பி. மனோஜ் திவாரி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவை நாளை மீண்டும் கூடியதும், அரவிந்த் கேஜரிவால் நம்பிக்கை வாக்கெடுப்பை முன்னெடுப்பார் எனத் தெரிகிறது. இதனால், தில்லி அரசியல் சூழலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

தில்லி சட்டப்பேரவையில் மொத்தமுள்ள 70 உறுப்பினர்களில், 62 பேர் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com