அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி 40 சதவீதம் நிறைவு!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணி 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளதாகக் கோயில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவு!
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணி 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவு!

அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கட்டுமானப் பணி 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளதாகக் கோயில் அறக்கட்டளை நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான கட்டுமானப் பணியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2020, ஆகஸ்டில் தொடக்கி வைத்தார். கோயில் கட்டுமானப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. 

கோயில் கட்டுமானப் பணிகள் 40 சதவீதத்துக்கும் மேல் நிறைவடைந்துள்ளன. 80 சதவீதத்துக்கும் அதிகமான பீடத்தின் பணிகள் முடிந்துள்ளன. 

உலகம் முழுவதிலுமிருந்து வரும் பக்தர்கள் 2023ஆம் ஆண்டு டிசம்பர் முதல் சுவாமி தரிசனம் செய்யலாம் என்று ஸ்ரீ ராம ஜென்மபூமி தீர்த்த சேத்திர பொதுச் செயலாளர் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.

மேலும், ராமர் கோயில் கட்டுமானத்திற்குப் பயன்படுத்தப்படும் பணம் செலவுகள் குறித்துக் கேட்டதற்கு, கடவுளுக்காகச் செய்யும் பணியில் பணத்திற்குப் பஞ்சம் இருக்க முடியாது என்றார் அவர். 

கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள் மேம்படுத்துவதற்கான கட்டுமானப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. பிரசித்தி பெற்ற அனுமன்கர்ஹி கோயிலுக்குச் செல்லும் சாலையை விரிவுபடுத்துவதற்காக கடைகள் மற்றும் வீடுகளை இடிக்கும் பணியும் நடந்து வருகிறது.

கோயில் கட்டடம் குறைந்தது ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்க பூமிக்கடியில் மிகப்பெரிய அடித்தளம் அமைக்கப்படுகிறது என்று அறநிலையத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

ராமர் கோயிலின் கட்டுமானம் பார்ப்பவர்களை வியக்கவைக்கும் வகையில் கற்களைச் செதுக்கி மெருகேற்றி வருவதாகவும், அயோத்திக்கு வரும் பலர் ராமர் கோயில் கட்டுமானப் பணிகளைப் பார்வையிட்டுச் செல்வதாகவும் அவர் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com