சிபிஐ-யில் 1,673 பணியிடங்கள் காலியாக உள்ளன: மத்திய அரசு

நாட்டின் விசாரணை நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பணியிடங்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டின் விசாரணை நிறுவனமான மத்திய புலனாய்வுப் பிரிவின் (சிபிஐ) பணியிடங்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமான பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நவம்பர் 30, 2022 நிலவரப்படி, சிபிஐயில் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 7,295 ஆகவும், காலிப் பணியிடங்களின் எண்ணிக்கை 1,673 ஆகவும் உள்ளது என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

காலியிடங்கள் ஏற்படுவதும், அவற்றை நிரப்புவதும் ஒரு தொடர்ச்சியான செயலாகும். அதிகாரிகளின் பதவி உயர்வு, பணி ஓய்வு ஆகியவற்றைப் பொறுத்து எண்ணிக்கை மாறுபடும். நடைமுறையில் உள்ள ஆட்சேர்ப்பு விதிகள்/சட்டத்தின் விதிகளின்படி காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அனைத்து நிலைகளிலும் உள்ள காலிப் பணியிடங்களை விரைவாக நிரப்புவதை உறுதிசெய்ய முனைப்புடன் கூடிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பொதுத்துறை வங்கிகள், உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில்  இருந்து தகுந்த நபர்களை பரிந்துரைக்க சிபிஐ கேட்டுக்கொண்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com