இந்தியப் பொருளாதாரம் குறித்த ரகுராம் ராஜனின் பார்வை மாறும்: மத்திய அமைச்சர்

இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் மறுத்துள்ளார்.
இந்தியப் பொருளாதாரம் குறித்த ரகுராம் ராஜனின் பார்வை மாறும்: மத்திய அமைச்சர்

இந்தியப் பொருளாதாரம் அடுத்த நிதியாண்டில் அதிர்ஷ்டம் இருந்தால் 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டும் என ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கூறியதை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.

உலக நிறுவனங்கள் பலவும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் ஜிடிபி வளர்ச்சி 7 சதவிகிதத்துக்கும் அதிகமாக இருக்கும் என கணித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் நேற்று முன் தினம் (டிசம்பர் 14) காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி மேற்கொண்டுள்ள ஒற்றுமை நடைப்பயணத்தில் பங்கேற்றார். 

இந்த ஒற்றுமை யாத்திரையின்போது ரகுராம் ராஜன் இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசியதாவது: அடுத்த ஆண்டு இந்தியப் பொருளாதாரத்துக்கு கடினமாக இருக்கும். உலகம் முழுவதும் பொருளாதாரம் இறங்கு முகத்தில் செல்லவுள்ளது. ஏற்கனவே, இந்தியாவில் வட்டி விகிதங்கள் அதிகரித்துள்ளன. ஆனால், ஏற்றுமதி குறைந்து கொண்டே வருகிறது. இந்தியாவில் நிலவும் பணவீக்கமும் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும். அடுத்த நிதியாண்டில் இந்தியா 5 சதவிகித ஜிடிபி வளர்ச்சியை எட்டுவதே கடினம் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜனின் இந்த கணிப்பை மத்திய அமைச்சர் கஜேந்திர செகாவத் மறுத்துள்ளார்.

இது தொடர்பாக அமைச்சர் கஜேந்திர செகாவத் கூறியிருப்பதாவது: ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் அடுத்த நிதியாண்டில் இந்தியப் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் என நம்பிக்கையில்லாமல் கூறியுள்ளார். அதற்கான காரணம் என்ன என்பதற்கு அவர் மட்டும்தான் விளக்கம் கொடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கி உட்பட உலகின் அனைத்து பெரிய நிறுவனங்களும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி அடுத்த நிதியாண்டில் 7-8 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. உலக வங்கியும் இந்தியப் பொருளாதாரம் 6.9 சதவிகிதம் இருக்கும் எனக் கணித்துள்ளது. அதன்பிறகு தனி ஒருவர் இந்தியப் பொருளாதாரம் 5 சதவிகித வளர்ச்சியை எட்டுவதே கடினம் என்று கூறினால் அதற்கு அவர்தான் எவ்வாறு என்று விளக்கமளிக்க வேண்டும். எதன் அடிப்படையில் அவர் இவ்வாறு கூறினார் என்பதை அவர் மட்டுமே விளக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com