முக்கியப் பிரச்னைகளில் மெளனம் காப்பது ஏன்? பாஜகவுக்கு சோனியா காந்தி கேள்வி

முக்கியப் பிரச்னைகளில் மெளனம் காப்பதை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். 
சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்
சோனியா காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர்

முக்கியப் பிரச்னைகளில் மெளனம் காப்பதை பிரதமர் நரேந்திர மோடியும் பாஜகவும் வழக்கமாகக் கொண்டுள்ளதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி விமர்சித்துள்ளார். 

நாடாளுமன்றத்தில் இந்திய - சீன எல்லைப் பிரச்னை குறித்து விவாதிக்க மறுப்பு தெரிவிக்கப்படுவது தொடர்பாக பாஜகவுக்கு சோனியா காந்தி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (டிச.21) நடைபெற்றது. தேசிய அளவிலான சவால்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கொண்டுவருவது மரபு. பல முக்கிய கேள்விகளின் மூலம் பல பிரச்னைகளை வெளிச்சம்போட்டு ஆராய முடியும் என சோனியா காந்தி குறிப்பிட்டார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்தியாவின் மீது சீனா தொடர்ந்து தாக்குதல் நடத்துவதன் நோக்கம் என்ன? பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா சார்பில் என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன? எதிர்காலத்தில் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறாமல் இருக்க அரசு வகுக்கும் கொள்கைகள் என்ன? ஏற்றுமதியை விட அதிக அளவு சீனாவிலிருந்து இறக்குமதி செய்கிறோம். சீனாவின் ராணுவ அத்துமீறலுக்கு ஏன் பொருளாதார ரீதியில் சினாவைத் தாக்கி பதிலளிக்கவில்லை? வெளிப்படைத்தன்மையற்ற விவாதம் நாட்டை பலப்படுத்துவதாகாது. அரசின் கொள்கைகளையும், நடவடிக்கைகளையும் மக்களுக்கு தெரிவிக்க வேண்டியது அரசின் கடமை எனத் தெரிவித்தார்.

முக்கியமான பிரச்னைகளில் மெளனம் காப்பது பாஜக அரசின் கொள்கைகளில் ஒன்றாக உள்ளது. மாறாக எதிர்க்கட்சியின் குரல்களையும் விவாதங்களையும் தடுப்பதிலேயே அக்கறை செலுத்துகிறது. இது மத்திய அரசு மட்டும் செய்யவில்லை, மாநிலங்களில் ஆளும் பாஜக அரசும் இதைத்தான் செய்கின்றன எனக் குறிப்பிட்டார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com