ஹரியாணாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானில் முடிவடைந்து ஹரியாணாவில் தொடங்கியுள்ளது.
ஹரியாணாவில் ராகுல் காந்தி நடைப்பயணம்!

ராகுல் காந்தியின் ஒற்றுமை நடைப்பயணம் ராஜஸ்தானில் முடிவடைந்து ஹரியாணாவில் தொடங்கியுள்ளது.

வரும் 2024 மக்களவை தேர்தலையொட்டி, நாடு முழுவதும் உள்ள மக்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை(பாரத் ஜோடோ யாத்ரா) காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்டு வருகிறார்.

தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் 7ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து இந்த நடைப்பயணத்தை தொடங்கி வைத்தார். கேரளம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களைக் கடந்து நேற்று மாலை ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்தது.

ஹரியாணா மாநிலத்திற்குள் நுழைந்த ராகுல் காந்தியின் நடைப்பயணத்தை அம்மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, மூத்த தலைவர்கள் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, தீபேந்தர் சிங் ஹூடா உள்ளிட்டோருடன் ஆயிரக்கணக்கான தொண்டர்களும் வரவேற்றனர்.

இன்று 106-வது நாளாக ஹரியாணா மாநிலத்தில் ராகுல் காந்தியின் நடைப்பயணம் தொடர்ந்து வருகின்றது.

இந்த நடைப்பயணமானது மொத்தம் 3,570 கிலோ மீட்டர் கடந்து 150-வது நாளில் காஷ்மீரை அடைகிறது.

ஒற்றுமைக்கான நடைப்பயணம் முடிவடைய இன்னும் 44 நாள்களே உள்ள நிலையில், நடைப்பயணத்தில் பங்கேற்போர் கட்டாயம் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும், முகக்கவசம், சமூக இடைவெளி போன்ற கரோனா விதிமுறைகளை பின்பற்றாவிடில் நடைப்பயணத்திற்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் காங்கிரஸுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com