அச்சுறுத்தும் கரோனா: அச்சம் தரும் தகவல்கள் இதுதான்!

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியருக்கிறது. இதனால், நாட்டில் மீண்டும் ஒரு கரோனா அலை தாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
அச்சுறுத்தும் கரோனா: அச்சம் தரும் தகவல்கள் இதுதான்!
அச்சுறுத்தும் கரோனா: அச்சம் தரும் தகவல்கள் இதுதான்!

சீனா, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் கரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியருக்கிறது. இதனால், நாட்டில் மீண்டும் ஒரு கரோனா அலை தாக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

சீனத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முதல் கரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, இந்தியாவுக்கு பாதிப்பு வராது என்று எப்படி மெத்தனம் காட்டினோமோ அதுபோல இந்த முறை இருக்க முடியாது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுக்க வேண்டியதுதான் அவசியம்.

எல்லாவற்றையும் தாண்டி, இந்த முறை அச்சம் தருவதாக இருக்கும் ஒரு விஷயம் கரோனா தடுப்பூசி தவணை. நாட்டில் உள்ள பெரும்பாலானோர் கரோனா தடுப்பூசிகளை முறைப்படி போட்டுக் கொண்டுள்ளனர். ஆனால், தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணை அறிவிக்கப்பட்டபோது, நாட்டில் கரோனா வைரஸ் மெல்ல குறைந்து கொண்டிருந்ததால், மக்களுக்கு ஒரு அலட்சியம் வந்துவிட்டது.

இதனால், நாட்டில் உள்ள 27 - 28 சதவீதம் பேர் மட்டுமே கரோனா தடுப்பூசி முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டுள்ளனர். எனவே, முதியவர்களும் குறிப்பாக இணை நோய் இருப்பவர்களும் உடனடியாக கூடுதல் தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியிருக்கிறது.

நிதி ஆயோக் உறுப்பினா் (சுகாதாரம்) வி.கே.பால் கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா தடுப்பூசி செலுத்த தகுதியுடையவா்களில் 27-28 சதவீதம் போ்தான் முன்னெச்சரிக்கை தவணையை செலுத்திக் கொண்டுள்ளனா். எனவே, தகுதியுடைய அனைவரும் கரோனா தடுப்பூசியை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும். கூட்டமான இடங்களுக்கு செல்லும்போது மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும். தற்போதைய நிலையில், சா்வதேச விமான போக்குவரத்து வழிகாட்டு நெறிமுறைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. யாரும் பீதியடைய வேண்டாம்’ என்றாா்.

அதிர்ச்சியளிக்கும் பிஎஃப்.7

புதிய வகை ஒமைக்ரான் பிஎஃப்.7 பரவல் காரணமாக, சீனாவில் தற்போது கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இது, மிக வேகமாக பரவக்கூடியதாகும். தடுப்பூசி செலுத்தியவா்களையும் பாதிக்கும் திறன் கொண்ட இந்த புதிய வகை பாதிப்பு, இந்தியாவிலும் கண்டறியப்பட்டிருப்பதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

‘குஜராத்தில் இருவா், ஒடிஸாவில் ஒருவா் என இதுவரை 3 பேருக்கு ஒமைக்ரான் பிஎஃப்.7 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல் பாதிப்பு, குஜராத் உயிரி-தொழில்நுட்ப ஆராய்ச்சி மையத்தால் கடந்த அக்டோபா் மாதம் கண்டறியப்பட்டது. சீனா தவிர, அமெரிக்கா, பிரிட்டன், பெல்ஜியம், ஜொ்மனி, பிரான்ஸ், டென்மாா்க் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளிலும் ஏற்கெனவே கண்டறியப்பட்டுள்ளது.

தமிழகம் எப்படி இருக்கிறது?

இந்தியாவில் நாள்தோறும் கரோனா பாதிப்பு குறைந்துவரும் போதிலும், தமிழகம், கேரளம், கா்நாடகம், மகாராஷ்டிரம், தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் பதிவாகின்றன. கடந்த டிசம்பா் 20-இல் பதிவான புதிய பாதிப்புகளில் 84 சதவீதம் இந்த 5 மாநிலங்களில் பதிவானதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com