2022 ஜனவரியில் மஹிந்திரா வாகன விற்பனை 20% வளர்ச்சி

உள்நாட்டு வாகன நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) 2022 ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்த 46,804 வாகனங்களை விற்பனை செய்து, 20 சதவிகித இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 
2022 ஜனவரியில் மஹிந்திரா வாகன விற்பனை 20% வளர்ச்சி


புது தில்லி: உள்நாட்டு வாகன நிறுவனமான மஹிந்திரா & மஹிந்திரா (எம்&எம்) 2022 ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 46,804 வாகனங்களை விற்பனை செய்து, 20 சதவிகித இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:

2022 ஜனவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக 46,804 வாகனங்களை விற்பனை செய்து, 20 சதவிகித இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. 

2022 ஜனவரி மாதத்தில் பயன்பாட்டு வாகனங்கள் பிரிவில், மஹிந்திரா 19,848 வாகனங்களையும், பயணிகள் வாகனங்கள் பிரிவில் 19,964 வாகனங்களை விற்பனை செய்துள்ளது.

"ஜனவரி 2022க்குள் முதல் 14,000 எக்ஸ்யூவி700-களுக்கு பில்லிங் செய்வதற்கான இலக்கை நிறைவேற்றி உள்ளோம், மேலும் 1,00,000 வாகனங்களுக்கான முன்பதிவுகளை பதிவு செய்துள்ளோம், இது இந்திய எஸ்யூவி துறையில் ஒரு முக்கிய மைல்கல் ஆகும்," என்று மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரி வீஜய் நக்ரா தெரிவித்துள்ளார்.

2022 ஜனவரி மாதத்தில் 2,861 வாகனங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன. வணிக வாகனங்கள் பிரிவில், 21,111 வாகனங்களை விற்பனை செய்து 58 சதவிகித வளர்ச்சியை எட்டியுள்ளது.

நிறுவனத்தின் திட்டப்படி, பல்வேறு உலகளாவிய விநியோகச் சங்கிலித்தொடர் சவால்களுக்கு மத்தியிலும் 2022 ஜனவரியில் ஒட்டுமொத்தமாக 20 சதவிகித வளர்ச்சியுடன் தொடர்கிறது. 

2022-23ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த அதே நாளில் இந்த புள்ளிவிவரங்களை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனம் வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com