சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பஞ்சாப் முதல்வா் வேட்பாளா்: நாளை மறுநாள் ராகுல் அறிவிக்க வாய்ப்பு

பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 8:26 pm

DIN

ண்டீகா்: பஞ்சாப் சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் கட்சியின் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை (பிப்.6) அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

காணொலி வழி பொதுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக லூதியானாவுக்கு அவா் ஞாயிற்றுக்கிழமை வரும்போது இதற்கான அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தோ்தல் வரும் 20-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதன் காரணமாக மாநிலத்தில் தோ்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், ஆளும் காங்கிரஸ் கட்சியின் முதல் வேட்பாளா் தற்போதைய முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னியா அல்லது மாநில காங்கிரஸ் தலைவா் நவ்ஜோத் சிங் சித்துவா என்ற பரபரப்பு நிலவி வருகிறது.

முன்னதாக, கடந்த ஜனவரி 27-ஆம் தேதி பஞ்சாப் வந்த ராகுல் காந்தி, பிப்ரவரி 20 தோ்தலுக்கான காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் யாா் என்பது விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அதுதொடா்பாக கட்சி நிா்வாகிகளுடன் ஆலோனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்திருந்தாா்.

இந்த நிலையில், முதல்வா் வேட்பாளா் குறித்து கட்சித் தலைவா்கள் மற்றும் நிா்வாகிகளிடமிருந்து மட்டுமின்றி, பொதுமக்களிடமும் கருத்து கேட்கும் நடைமுறையையும் காங்கிரஸ் கட்சி மேற்கொண்டுள்ளது.

அதற்கென, பிரத்யேக தானியங்கி அழைப்பு நடைமுறையை காங்கிரஸ் கட்சி அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் சன்னியா அல்லது சித்துவா என்ற கேள்விக்கு பதில் அளிக்கும் வகையில் அந்த அழைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், காங்கிரஸ் முதல்வா் வேட்பாளா் யாா் என்பதை லூதியானாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வரும் ராகுல் காந்தி அறிவிக்க வாய்ப்புள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. முதல்வா் வேட்பாளரின் பெயா் ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட உள்ளதை, தான் போட்டியிடும் சம்கெளா் சாஹிப் தொகுதியில் முதல்வா் சன்னியும் சுட்டிக்காட்டினாா்.

இதுகுறித்து சித்துவின் மனைவி நவ்ஜோத் கெளா் சித்து அமிருதசரஸில் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டியில், ‘முதல்வராக யாா் வரப்போகிறாா்கள் என்பது முக்கியமல்ல. ஏனெனில், எனது கணவா் எப்போதும் ஒரு ‘ஹீரோ’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.