சாதி, மத பாகுபாடின்றி ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் கர்நாடக முஸ்லிம்!

கர்நாடகத்தில் ஹிஜாப்  விவகாரத்திற்கு மத்தியில் சாதி, மதத்திற்கு அப்பால், உடுப்பியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் இலவசமாக உணவளித்து வருகிறார். 
சாதி, மத பாகுபாடின்றி ஏழைகளுக்கு இலவச உணவளிக்கும் கர்நாடக முஸ்லிம்!
Published on
Updated on
1 min read

கர்நாடகத்தில் ஹிஜாப்  விவகாரத்திற்கு மத்தியில் சாதி, மதத்திற்கு அப்பால், உடுப்பியில் ஹோட்டல் உரிமையாளர் ஒருவர் இலவசமாக உணவளித்து வருகிறார். 

கர்நாடகத்தில் இந்து மாணவர்களின் எதிர்ப்பினால் ஹிஜாப் அணிந்துவரும் முஸ்லிம் மாணவிகளுக்கு கல்லூரியில் அனுமதி மறுக்கப்பட்டு வருவது பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது. 

இந்நிலையில் பசிக்கு சாதி, மதம் எல்லாம் தெரியாது என்ற கோணத்தில் தன்னுடைய உணவகத்துக்கு வரும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவளித்து வருகிறார் உடுப்பியில் சைட்டன் என்ற ஹோட்டலை நடசத்தி வரும் முஸ்லிம் நசீர் அகமது

கரோனா பொதுமுடக்கத்தில் தொடங்கி தற்போது ஹிஜாப் பிரச்னை சூழலில்கூட கூலித் தொழிலாளர்கள், பிச்சைக்காரர்கள், புலம்பெயர்ந்த மக்கள் மற்றும் உணவு தேவைப்படுபவர்களுக்கு உணவளிக்க தினமும் மதியம் மற்றும் இரவில் குறைந்தது 4 கிலோ கூடுதல் உணவு தயார் செய்கிறார். 

சாதி மற்றும் மதத்தைப் பொருட்படுத்தாமல் இந்த சேவை செய்யும் நசீர் முகமது இதுகுறித்து கூறுகையில், 'எங்கள் குடும்பத்தில் 11 சகோதர, சகோதரிகள் இருந்ததால் உணவில்லா சூழ்நிலையை நாங்கள் எதிர்கொண்டிருக்கிறோம். அதனால்தான் இப்போது என்னால் முடியும்போது ஏழைகளுக்கு உணவு அளிக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக செய்து வருகிறேன். எந்தவொரு சூழ்நிலையிலும் ஏழைகளுக்கு உணவளிப்பதை நிறுத்தவில்லை. மனிதநேயம் முதன்மையானது' என்றார். 

புலம்பெயர்ந்த பல ஏழை, எளிய மக்கள் அவரை 'கடவுள்' என்று அழைக்கின்றனர். பாகல்கோட்டில் இருந்து வேலை தேடி இடம் பெயர்ந்த தொழிலாளி ஒருவர் அவரை தனது கடவுள் என்றே கூறுகிறார். அவர் நசீர் முகமது ஹோட்டலில் கடந்த மூன்று மாதங்களாக பணம் எதுவும் கொடுக்காமல் இலவச உணவை சாப்பிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com